இறப்பில் இருந்து பாடம் கற்க துணிந்து
அதில் இறங்கி அந்த பாதையை
ராஜபாட்டையாய் மாற்றி நடைபோட்டவன்
வரலாற்றில் எனக்கு தெரிந்து புத்தன் மட்டுமே.
மற்ற எல்லோரும் அந்த பாதையை
முட்டு சந்தாகதான் உபயோக படுத்தி யிருக்கிறார்கள்.
இறப்பை சிந்திக்க
வாழும் வாழ்க்கை ஏனோ அனுமதிப்பது இல்லை என்றே தோன்றுகிறது.
அதனாலேயே
அனுபவத்தில் சிறந்த முன்னோர்கள்
செத்தாரை போல் திரி என்று சொல்லியிருக்கிறார்கள்