உடலாகிய சந்திரன் வளர்பிறை காலத்தில் திரிகோணமாகவும்,
தேய்பிறை காலத்தில் கேந்திரமாகவும் அமர்ந்திருப்பது மிகமிக உத்தமம்.
சாயா கிரகங்களாகிய ராகு, கேதுக்களில் ராகு 4ம் இடத்திலும்
கேது 10ம் இப்படியாக கிரகங்களின் பலம் அமைந்து இவர்களுடைய திசை வரும் காலம்
ஜாதகர்களுக்கு பிரபலமான ராஜயோகம் ஏற்படும்.
இதற்கு மாறுபட்ட வகையில்
கேந்திரங்களில் பாபக் கிரகங்களும்,
திரிகோணங்களில் சுபக் கிரகங்களும் அமர்ந்து
சுபக்கிரக பார்வை, சேர்க்கை அமையப் பெற்றவர்களுக்கும்
வாழ்க்கையில் உயர்வுகள் அமைகின்றன.
லக்கினாதிபதிகள் மேற்கண்ட விதமாக
கேந்திர திரிகோணங்களில் அமர்ந்து இருந்தாலும்
மேற்கண்ட வரிசைக் கிரமமே யோக லட்சணமாகும்.