கொடுப்பதிலும் கெடுப்பதிலும் நிகரற்ற பலசாலியான சனி பகவான்
ஜென்ம லக்கினத்திற்கு 7மிடத்தில் பூரண பலம் பெறுகிறார்.
7மிடத்தில் சனி இருக்கும் போது பிறந்தவர்கள் வாழ்க்கையில்
மிக உன்னத நிலையை அடைகிறார்கள் என்பது அனுபவ சித்தாந்தம்.
களத்திர காரகனான சுக்கிரன் சுகஸ்தானமாகிய 4மிடத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள்
மிக்க பலசாலிகள் பாக்கியங்களோடு வாழும் பாக்கியம் அமையும்.
புதன், குரு ஆகிய சுபக்கிரகங்கள் லக்கினத்தில் அமர்ந்திருந்தால்
(முதலாம் திரிகோணம்) மிக்க பலசாலிகளாக பூரண பலத்தோடு விளங்குகிறார்கள்.