கோமு: என்ன பண்ணிட்டு இருக்க
காமு: -ப்ளேன் பண்ணிட்டேன் இனி வொர்க்குள்ளே போக போறேன்.
கோமு – என்ன ப்ளேன் பண்ணீட்டே
காமு – எப்படியும் இந்தியன் டீமில செலக்ட் ஆகணும்னு,
கோமு அப்படியா வொர்க் என்ன பண்ணப்போற
காமு – தினமும் பிராக்ட்டீஸ்
கோமு – அப்புறம்
காமு – அத்தனை தான்
கோமு – அது மட்டும் போதுமா
காமு – ஏன் அதுதான் பண்ணனும் அத தவிர வேற என்ன பண்ணனும்.
கோமு – உன்னோடது முயற்ச்சி மட்டும்தான்.
காமு – ஆமா
கோமு – அந்த முயற்ச்சி கண்டினியூ ஆகணும்னா என்னென்ன
நீ பண்ணனும் அப்படீன்னு ஏதாச்சும் யோசிச்சு வைச்சிருக்கியா
காமு – முயற்ச்சி கண்டினியூசா பண்ணனும்ன்னு மட்டும் யோசிச்சா பத்தாதா
கோமு – பத்தாது
காமு – நிஜமா பத்தாதா
கோமு – நிஜமா பத்தாது
காமு – அப்ப நான் என்ன யோசிக்கனும்
கோமு – என்னன்னு கேக்காததே என்னென்னால்லாம் யோசிக்கனும்னும்ன்னு கேளு
காமு – சரி கேட்டுட்டேன் சொல்லு
கோமு – பஸ்டு கோபதாபங்கள் ஸ்கெண்ட் பயங்கள் த்தேட் உணர்ச்சிகள்-
காமு – அது என்ன உணர்ச்சிகள்
கோமு – வெளிய சொல்ல வெக்கப்படற – வெளிய தெரியகூடாதுன்னு நினைக்கிற நெனப்புகன்னு வெச்சுக்கோயேன்
காமு – சரி மேல சொல்லு
கோமு – இது எல்லாம் முயற்ச்சிய முடமாக்குற விஷயங்க
இத புரிஞ்சுகிட்டு இதுக்கு தகுந்தபடி உன்ன நீ செட் பண்ணிட்டீன்னா
உன்னோட முயற்ச்சி கண்டினியூ ஆகும்.
அப்ப நீ எங்க ரீச் பண்ணனும் அப்படீன்னு நினைக்கிறயோ அங்க நீ நிப்ப
இத உத்துபாரு முடிஞ்சா உணரப்பார்