மயூராசனம்
மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப்பெயர்.
முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும்.
முன் கைகளைச் சேர்த்துத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும்.
வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புளை முழங்கை மேல் வைத்து
கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும்.
ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலையணை கண்டிப்பாக வைக்க வேண்டும்.
ஒரு முறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம்.
பலன்கள் –
வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும்.
விதானம், இரைப்பை, ஈரல், கணையும், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஒட்டம் ஏற்படும்.
ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும்.
நீரழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.