ஒரு விஷயம்.
மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இருக்கும் ஒன்று;
மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ
அதுவரை இருக்கும் ஒன்றுதான்
காதல்.
இத்தனை ஆண்டுக்கால அனுபவம் இருந்தாலும்
ஏனோ நாம் காதல் பண்ணும் விஷயத்தில்
சொதப்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும்
இந்த மனிதர்களால்
காதல் என்பதை மட்டும் கண்டறிய முடியவில்லை
எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது…
எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது?
தெரியாது.
இது
விபத்தா,
தெரியாது.
விதியா?
தெரியாது