இதனுடைய அடி வேரை கண்டு தெளிய வேண்டும் என்ற
எண்ணம் கூட அவனுக்கு ஏனோ தோன்றுவது இல்லை
எல்லாவற்றிலும் வளர்ச்சி அடைந்து விட்டோம் என்ற நினைவில், நிலையில்,
மனிதன் ஏனோ தன் வாழ்க்கையை
வாழும் நியதியை அறிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை
எத்தனையோ வெற்றிகளை, வளர்ச்சிகளை உருவாக்கி கொண்டோம் என்ற
ஆணவத்தின் பிடியில் சிக்கியுள்ள மனித குலம்,
பயம், ஆசை, இன்பம் போன்ற நிலைகளை புரிந்து கொள்ளாமல்
அதனுடனேயே தன்னுடைய வாழ்நாட்களை கழிப்பது
சோகத்திலும் சோகம்.