மூன்று வயது வரை அன்பாய் வளர்த்துவிட்டு
அவர்களை தூக்கி
யாருக்கோ உழைக்க தேவையான கருவியாக மாற்றும்
பணியாளர்களிடம்(அதாவது பள்ளி கூடங்களில் ) தூக்கி போட்டு விடுகிறீர்கள்
இதைத்தான் நீங்கள் அன்பு என்கிறீர்கள்.
வேகமும், போட்டியும் இருந்தால்
அங்கு வெறுப்பும் விரோதமும், வன்முறையும் இருக்கும்.
இவையெல்லாம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்குமா?
இந்த சூழலில் பயிற்றுவிக்கப் பட்டு,
வளர்ந்த குழந்தை அன்போடு இருக்குமா?