மனம் எனும் ரகசியம்.
மனிதனின் லட்சியத்தை ஒரு சில வார்த்தைகாளகக் கூறிவிட
முடியும். அது என்னவென்றால் மனித இனத்திற்கு அவர்களின்
தெய்வீகத்தன்மையைப் போதிப்பதும், வாழ்க்கையின்
ஒவ்வோர் அசைவிலும் அந்தத் தெய்வீகத் தன்மை வெளிப்படுமாறு செய்வது எப்படி என்பதை போதிப்பது ஆகும்
எல்லா ஆற்றல்களும் உங்களுக்குள் இருக்கிறது. நம்மால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள் நாம் பலவீனமானவர்கள், நம் மனம் பலவீனமானது என்று தயவு செய்து கருத்தில் கொள்ளாதீர்கள்.
ஒவ்வொர் ஆன்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது.
புற மற்றும் அக இயற்கையை அடக்குவதன் மூலம் இந்த அக
தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே நோக்கம்.
செயல் அல்லது வழிபாடு அல்லது பிராணனைக் கட்டுப்படுத்தல் அல்லது தத்துவ ஆராய்ச்சி, இவற்றுள் ஒன்றாலோ, அல்லது பலவற்றாலோ, எல்லாவற்றாலுமோ இதனைச் செய்து சுதந்திரனாக இரு, இதுவே மதத்தின் முழு உண்மை.
கொள்கைகளும், கோட்பாடுகளும், சடங்குகளும், கோயில்களும், உருவங்களும் இரண்டாம் நிலையில் உள்ள விளக்கம்.மனிதனிடம் உண்மையில் தெய்வீகம் மறைந்துள்ளது.
மனிதனுக்கு, மனிதன் வேறுபாடே இல்லை. எல்லா உயிர்களிலும்
தெய்வீகம் நிறைந்துள்ளது, மனிதனின் இயல்பு வலிமை,
நல்லவை, ஆற்றல் எல்லாம் தெய்வீகத்தின் தன்மை கொண்டது.
அதனால் உன்னுள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்து,
மற்றவை அதைச் சுற்றி இயல்பாக ஒழுங்குபடுத்தும்நாம் எல்லாம் இறைவனின் பிள்ளைகள், எல்லையற்றதான
தெய்வீக நெருப்புப் பிழம்பின் பொறிகள் நாம்,
நாம் எப்படிப் பூஜ்யங்கள் ஆக முடியும்? நாமே எல்லாம், எதைச் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். நம்மால் எதையும் செய்ய முடியும்.
மனிதன் எல்லாவற்றையும் செய்தாக வேண்டும். நம் ஒவ்வொரு
வரிலும், எல்லையற்ற அறிவு பரிபூரணமாக உள்ளது. நீங்கள்
பாமரர்கள் போல் தோன்றினாலும் உண்மையில் அப்படியல்ல.
நாம் புரிந்து கொள்ள சற்று காலதாமதமாகும். அப்போது புரிந்து
கொண்டுதான் ஆகவேண்டும்.
எல்லா உயிர்களிலும் இருப்பது ஒரே ஆன்மாதான்.
வெவ்வேறு உயிர்களிடம் அது வெளிப்படுவதில்தான் வேறுபாடு
உள்ளது. அந்த ஆன்மாவை வெளிப்படுத்த முயற்சி செய்தால்,
அப்போது உன்புத்தி எல்லா பொருள்களையும் துளைத்துச்
செல்வதை நாம் காணலாம். ஆன்மாவை உணர்ந்தால்
விஞ்ஞானம், மெய்ஞானம், தத்துவம் எல்லாமே உனக்கு எளிதில்
கிடைக்கும்.
மனத்தைக் கட்டுப்படுத்த உறுதியான மனவாற்றலை வளர்த்துக்
கொள்ள வேண்டும்.
நம் மனத்தின் இயல்பை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
சில வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு அதை முழு மனதுடனும்
புத்திசாலித்தனத்துடனும் பழக வேண்டும்.
மனம் கட்டுப்படுவது கடினம், ஆனால் அது சாத்தியமே.
It’s strong information ayya…thank you ayya.
நமஸ்காரங்க அய்யா
மனதை கட்டுபடுத்த
என்ன செய்ய வேண்டும்
அய்யா.
மனதை கவனிக்கனும்
நன்றிங்க அய்யா.
ஒவ்வொரு நொடியும் வெவ்வேறு விசயங்களை பற்றிய எண்ணங்கள் எழுந்த வண்ணம் இருக்குங்க அய்யா.