இந்த வரத்தால் அவன் கடுமையான, கொடுமையான
விளைவுகளை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிறான்
என்பதை கூட அவன் அறியவில்லை என்ன செய்வது
தன்னை தொலைத்துவிட்டான் என்பதை கூட அவனால்
அறிய முடியவில்லை என்பது எத்தனை பெரிய கொடுமையான விஷயம்.
இதிலிருந்து எப்போது, எப்படி மாறுவான், தெரியவில்லை.
சுயநலமும், பேராசையும், வஞ்சகமும், அதீத அறிவும்,
அவனுடைய உடைமைகள் ஆகிவிட பிறகு மாறுவது எங்ஙனம்.