உங்களின் வாழ்க்கையில் அறிவின் பங்களிப்பும்,
மனதின் பங்களிப்பும் எத்தனை சதவிகிதம் உள்ளது
என்பதை நீங்கள் உங்கள் செயல்களை, எண்ணங்களை
உற்றுப் பார்த்தாலே தெரிந்து விடும். அதாவது உற்று பார்த்து
பழக, பழக தெரிந்துவிடும்.
இதை அறிய நீங்கள் கண்டிப்பாக நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும்.
அந்த நேரமே வாழ்க்கையில் பொன்னானது,
ஏனென்றால்
அந்த நேரத்தில் நீங்கள் உங்களை கற்கிறீர்கள்
அதாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள் எப்பேற்பட்ட
வாய்ப்பு அது, அதை தவறவிடலாமா இது வரை தவற விட்டிருந்தாலும்
தவறில்லை இதிலிருந்தாவது தொடங்குவோம்.