ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம்.
ஏனென்றால், இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி
தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன்,
மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால்,
மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான்.
மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான்.
பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒருவேலையானாலும்
மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர,
மேலும் சிறப்பாகஅந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம்.
இந்த ஒரு குரல்,
ஒரே தட்டுதல்
(மன ஒருமைப்பாடு)இயற்கையின் கதவுகளைத் திறந்து
ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச்செய்கிறது.