மச்சாசனம்
பத்மாசனம் போட்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.
கைகளைப் பின்னால் ஊன்றி முதுகைத் தூக்கி வில் போல் வளைத்து
தலையைப் படத்தில் காட்டியபடி பின் வளைத்து, கைகளை எடுத்து,
கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும்.
தீர்க்கமாய் சுவாசிக்கவும்.
ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம்.
பலன்கள் ––
சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹலாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம்,
சுரப்பிகள் அனைத்தும் புத்துணர்ச்சியோடு வேலை செய்யும்.
முதுகெலும்பு பலப்படும்.
மார்பு விரிந்து நுரையீரல் நன்றாக வேலை செய்யும்.
மலச்சிக்கல் நீங்கும்.
மார்புக்கூடு, க்ஷயம், காசம், இருமல், கக்குவான், மார்புச்சளி நீங்கும்.