நாம் இளமையாய் இருக்கும் போது பணமிருக்காது.
சரி கொஞ்சம் பணத்தை சேர்த்துட்டு ஜாலியா இருக்கலாங்கறதுக்குள்ள இளமை போயிடுது.
சரி மத்திய வயசுலயாவது தாராளமா செலவு செஞ்சு மகிழ்ச்சியா இருக்கலாம்னு நினைச்சா
அப்ப நேரம் இருக்காது
முக்கியமான விஷயம்
நேரம் பணம் எல்லாம் இருக்கறப்போ மனசு இருக்காது.
ஒரு வேளை மனசு வெச்சாலும் உடம்பு ஒத்துழைக்காது,
இந்த அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும்
அப்படீன்னு நான் நினைக்கிறேன்.
எதையோ நெனைச்சு எதை, எதையோ துரத்திட்டு எப்பவுமே ஒடறதே வாழ்க்கையாயிருச்சு
இதுல
ஆசையோட சதவிகிதத்தை விட நிராசையோட சதவிகிதம் ரொம்ப அதிகம்
என்ன பண்றது
கடைசியில தான் தெரியுது
நாம ஒடற ஒட்டத்துக்கும்
சந்தோஷம், மகிழ்ச்சி போன்றதுக்கும் சம்பந்தமேயில்லைன்னு.