ப்ராணாயாமம் என்பது யோக சாதனங்களில் முக்கியமானது.
ப்ராணனின் சலனம் மனதின் சலனம் என்பார்கள்.
அதாவது ப்ராண சக்தி குறைவுபட்ட ஒருவனது மனது சலனமடைந்து கொண்டேயிருக்கும் என்பது அதன் உட்பொருள்.
அதனால்தான் யோகத்தின் படித்தரத்தில் ப்ராணாயாமம் நான்காவது நிலையாக உள்ளது.
அதாவது ஒழுக்கம், உடல் நலம், ப்ராண சக்தி இது மூன்றும் இருந்தால்தான் ஒருவன் மனதைக் கையாளவே முடியும்.
இந்த மூன்றில் ஒன்று குறைவுபட்டாலும் அவன் மனதின் கைப்பாவையாகத்தான் இருப்பான்.
இந்த மூன்றையும் முறைப்படுத்திய பிறகுதான்
அவன் புலனடக்கம், மன ஒருமைப்பாடு, தியானம் இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்கவே முடியும்.
சகஜ மார்க்கத்தில் முதலில் தியானத்தில் அமர வைத்து விடுவார்கள்.
பிறகு ஒவ்வொன்றாக கற்றுத் தருவார்கள்.
