பொருளாதார வளர்ச்சியே அனைத்திற்கும் தீர்வு என்று சிலர் பேசுகிறார்கள்
இது உண்மையா என்று ஆழமாக சிந்தித்தோம் என்றால் நிச்சயம் இல்லை என்பதே
விடையாக இருக்கும் ஒரு தேசம் என்னதான் பொருளாதாரத்தில் வளர்ந்தாலும்
அதன் மக்களிடையே சகிப்பு தன்மையும் பரஸ்பர அன்பும் தேச பற்றும் இல்லாது போனால்
அந்த பொருளாதார பலம் அழிவுக்கே வழி வகுக்கும்
மேலும் இந்த பொருளாதார வளர்ச்சியே சாத்தியம் இல்லைதான்
(பொருளாதார வளர்ச்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது பொருளாதாரம் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குவிந்து விடும் சாத்தியம் உண்டென்பது தான் நிஜம் )
இப்போது உள்ள அனைவரும் பொருளாதார அளவீடுகளுக்காகவே படிப்பு
எனும் மனோ பாவத்தில் இருக்கிறார்கள் அதன் படியே குழந்தைகளையும் வளர்க்கிறார்கள்
படிப்பின் பயன் நன்மையை நாடும் அறிவு நல்ல பண்புகளில் நிலைபெற்றால் என்பது போய்
படிப்பின் பயன் பொருளாதாரம் மட்டுமே என்னும் மனோ பாவம் மேலோங்கிவிட்டது
அதற்க்கு நாம் கொடுக்கும் விலை
உறவுகளின் அண்மை, அன்பு, பரஸ்பர பகிர்தல்கள், நல்ல பண்புகளில் வைராக்கியம்
போன்றவையே
இதற்கு உதாரணமாக நமது இந்திய நாடு ஒரு காலத்தில் இருந்தது ஆனால் தற்போதய போக்கு நமக்கு பாதுகாப்பிற்கு பதிலாக அச்சத்தைத்தான் தருகிறது