ஆண் அப்படி நகர இயற்கை வாய்ப்பை தரவில்லை.
அந்த நிலையை
ஆணே உருவாக்கி கொள்ளும் படிதான் இயற்கை வைத்துள்ளது.
கொஞ்சம் விளக்கமாக சொன்னால்
குழந்தையாய், குமரியாய், தாயாய் பெண் மாறும் போது
உடலிலும் மனதிலும் ஒரே சேர அனுபவம் பெறுகிறாள்.
ஆணுக்கு அப்படியல்ல
குழந்தையாய் வாலிபனாய் ஆன ஆணுக்கு
தந்தையாய் மாறும் போது
உடலில் மாற்றங்கள் குறைவாகவும்
மனதில் அதிக மாற்றங்களையும் அவன் அடைகிறான்.
இப்படியெல்லாம், யோசிக்கும் போது
அனுபவ பொருள் என்பது
உலகத்தில் எத்தனையோ இருந்தாலும்
ஆணுக்கு, பெண்ணும், பெண்ணுக்கு, ஆணுமே
மிக சிறந்த அனுபவ பொருள்கள்
இந்த பொருள்களில் இருந்து
அவர், அவர் அடையும் அனுபவம் என்பது
அவர்களுக்கே வெளிச்சம்
என்ன சொல்வது.
பெண் மட்டும் அனுபவ பொருள் அல்ல,
ஆணும்
அனுபவ பொருளே.