ஆழ்ந்த உணர்ச்சிகள்
நாம் சோகம், பயம், மகிழ்ச்சி அல்லது பாலியல் ஆசை போன்ற
தீவிரமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது,
உடல் இரண்டு வெவ்வேறு வழிகளில் அதை வெளிப்படுத்துகிறது.
முதலாவதாக, தோலின் கீழ் உள்ள தசைகளில் மின் செயல்பாடுகளில் அதிகரிப்பு ஏற்படும்.
இரண்டாவதாக, உங்கள் சுவாசம் கனமாகும்.
இந்த இரண்டு நிகழ்வுமே நமது தோலில் புல்லரிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
நீங்கள் உணர்ச்சிப்பூர்வமான ஒரு படத்தைப் பார்க்கும் போதோ
அல்லது உணர்ச்சிப்பூர்வமான சமூக தூண்டுதல்களைப் பார்ப்பது அல்லது
உணர்ச்சிபூர்வமான ஒன்றைக் கேட்பது கூட
புல்லரிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.