பல மரணங்களைக் கண்டு,
பல மனிதர்களுடன் பழகி,
அவர்களின் நிலைகளை அறிந்து
வாழ்க்கை அர்த்தமில்லாதது என்பதை புரிந்து கொண்டு
ஊரோடு ஒட்டி வாழ்ந்துதான் ஆகவேண்டும்
என்ற புரிதலை எது தருகிறதோ,
அதுவே கல்வி.
அந்த கல்வி ஆணவப்படாது,
ஆசைப் படாது,
ஆசையும், ஆணவமும் இல்லாத இடத்தில்
திருப்தி இயல்பாகவே இருக்கும்.
திருப்தி எப்போதும் மன நிம்மதியைத் தரும்.
மனநிம்மதியும், மனநிறைவும்
நாணயத்தின் இருபக்கங்கள் போல
இப்படி
வாழும் வாழ்க்கை நிறைவையும்,
இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்ளவும்
மனம் தயாராய் நிற்கும்.
அதனால்
சொல்லில் சக்தி பிறக்கும்.
சிந்தனையில்,
செயலில்,
தீர்மானமும்,
அன்பும்,
அக்கறையும்
இருக்கும்.
இன்றைய சூழ்நிலையில்
ஒருவருக்கு மனநிறைவும்
மன நிம்மதியும்
ஒரு சேர இருக்குமானால்.
அது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சக்தியின்
வடிவமாக காட்சியளிக்கும்
குருவருளால் மட்டுமே சாத்தியமாகும்.
இப்படி அனைவருக்கும்
கிடைத்தால் இந்த உலகில் வாழும் ஒவ்வொரு
மனிதர்களின் வாழ்வு எவ்வளவு
அற்புதமாக இருக்கும்.
இது என்னுடைய
பேராசையா என்று
எனக்கு தெரியல்லங்க
அய்யா.