பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்
சலமிகுதிதுன்பந் தருக்கும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை
பாலுமின்றிச் செயபுவனம் பாழ்
விளக்கம்:
அதாவது,
பிலவ ஆண்டில் மழை குறைவாக பெய்யும்,
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு துன்பம் அதிகரிக்கும்,
அதனால் அதிகம் கோபம் கொள்வர், மக்களுக்கு நலமில்லை.
ஆடு, மாடு, உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்கள் பெருமளவில் மடியும்.
உணவும், பாலும் இன்றி உலகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.
ஆதாரம்:- இடைக்காட்டுச் சித்தரின்-“அறுபது வருட வெண்பா”.