பிறையாசனம் — இவ்வாசனத்தை அர்த்த ( பாதி ) சக்ராசனம் எனகூறுவர். நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொண்டு கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு பின்னால் வளையவேண்டும். கொஞ்ச நாளில் படத்தில் காட்டியபடி இரண்டு கால்களையும் கைகளினால் பிடித்தபடி பின்னால் வளையும் தன்மை கிடைக்கும். சாதாரண மூச்சு ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். – பலன்கள் — முதுகுத் தண்டு பலம் பெறும். இளமை மேலிடும். உடலில் உள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்பெற்று புத்துணர்ச்சி பெறும். சோம்பல் ஒழிந்து சுறுசுறுப்பு உண்டாகும். கூன் முதுகு நிமிரும். நெஞ்சுக் கூடு விரிந்து நுரையீரல், சுவாச உறுப்புகள் பலம் பெறும். Category: யோகாBy admin@powerathmaSeptember 25, 2020Leave a commentTags: divine power athmaPIRAIYASANAMபிறையாசனம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:நின்ற பாத ஆசனம் — STANDING FOOT ASANAMNextNext post:உடலின் உள் நடப்பதுRelated Postsசுந்தர யோக சிகிச்சை முறை 141April 27, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 140April 26, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 139April 25, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 138April 24, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 137March 25, 2025சுந்தர யோக சிகிச்சை முறை 136March 24, 2025