உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.
செவிடன் யார் ?
நல்லதைக்
கேட்காதவன்.
ஊமை யார் ?
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
நண்பன் யார் ?
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்