எது மரணத்துக்கு இணையானது ?
அசட்டுத்தனம்.
விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?
காலமறிந்து செய்யும் உதவி.
இறக்கும் வரை உறுத்துவது எது ?
ரகசியமாகச் செய்த பாவம்.
எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள்,
சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்… ஆகியோர் !
சாது என்பவர் யார் ?
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.