உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.
தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை.
சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
நல்லவர்கள்.
எது சுகமானது ?
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
எது இன்பம் தரும் ?
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.