காமு பிரமாணம் அப்படீன்னா என்ன
கோமு பிரமாணம் அப்படீங்கறது ஆப்த வாக்கியம்.
காமு அப்ப ஆப்தவாக்கியங்கறது
கோமு ஆப்த வாக்கியம்னா உண்மையை கண்டிறிந்த ரிஷிகள், ஞானிகள், யோகிகள்,
இவர்களின் வார்த்தைகள், இவர்களால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களுக்கு
ஆப்த வாக்கியம்ன்னு பேர்
காமு ஓஹோ அப்படியா
கோமு விஷயங்களை புரிஞ்சுக்க
புலன்களை தாண்டுன அறிவுன்னு ஒன்னு இருக்கு
அந்த அறிவுனால சிந்திச்சு யோகிகள் சொன்னது தான் ஆப்த வாக்கியங்கள்
காமு ஆப்தவாக்யங்களுக்கு எது அத்தாட்சி
கோமு நீ பெரிய அறிவாளி இது என்னன்னே தெரியல
அவங்கள ஆராய்ச்சி பண்ணற
இருந்தாலும் சொல்லறேன்
அவங்களோட அனுபவமே அத்தாச்சி புரிஞ்சுக்கோ
நம்முடைய விவேக புத்திக்கும் மனித குலத்தோட கடந்த கால அனுபவத்துக்கும்
முரண்படாம இருக்குற அந்த அறிவுக்கு பிரமாணம் அப்படீன்னு பேரு
காமு நீ இப்ப என்ன சொல்லவர கொஞ்சம் ஏதாவது உதாரணத்தோட சொல்லேன்