பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது.சுக்கிலமும்
சுரோணிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு, மூன்றும் சேர்ந்து மண் உரு கொண்டு
உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம், கபம் என நிலைப்படுகின்றது.
இவ்வாறு பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள உடலானது உலகில் உள்ள தாதுப்பொருட்கள்,
தாவரப் பொருட்கள், அனைத்தும் சங்கமமாகின்றது.
மனித உடல் ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய சிறிய பிரபஞ்சம் என்றே சித்தர்கள்
கூறுகின்றனர்.மேலும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தில் உள்ள
பொருட்களோடு தொடர்புடையதாகவும், இந்த தத்துவங்களின் அடிப்படையில்தான் மனித
உயிர் அனைத்து சக்திகளையும் அடக்கி ஆளும் தன்மை கொண்டுள்ளதாகவும்
கூறுகின்றனர்.சூரிய சக்தியானது மனிதனின் இதயத்துடன் தொடர்புடையது என்றும்,
மூளை நரம்புகள் அனைத்தும் சந்திரனோடு தொடர்பு உடையவை என்றும்,
பித்தப்பை இரத்தம், செவ்வாயோடு தொடர்பு உடையவை என்றும்
உடலை பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.