உயர்ந்த பீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக் கொண்டு,
ஏபிச்சைக்காரா இதை வாங்கிக் கொள் என்று நீ சொல்லாதே,
மாறாக அவனுக்குகொடுப்பதனால்
உனக்கு நீயே உதவி புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து,
அந்தஏழை இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு.
கொடுப்பவன்தான்பாக்கியசாலியே தவிர,
பெறுபவன் அல்ல.
இந்த உலகில் உன்னுடைய தர்மசிந்தனையையும்,
இரக்க மனப்பான்மையையும்
பயன்படுத்த வாய்ப்புக்கிடைத்திருப்பதற்காக
நீ நன்றியுள்ளவனாக இரு.
இதன் மூலம்
தூய்மையும் பரிபூரணத்தன்மையும்
உன்னை வந்தடையும்.