பலவீனத்தை எல்லாம் ஒப்பனைகள் அதிகம்
பூசி பலமாக மாற்ற வேண்டாம்..
மனமுவந்து ஏற்றுக்கொண்ட பின்
அவைகள் தானாகவே பலமாகிவிடும்!
அங்கேயே தான் உள்ளன
பகல்கள்..
எப்படியும் வந்தே தீரும்
இரவுகள்..
அது அது அப்படியே இயங்கட்டும்
இயைந்து கொள்ளுங்கள்!
ஒடிந்த முருங்கை மரத்தின்
கிளை மீண்டும் ஒரு மரமாகும்..
எடுத்து அதே தோட்டத்தில் நட்டு வையுங்கள்!!