1. ஜென்ம லக்கினத்தில் விதீபாதனிருந்தால், ஜாதகன் துக்கத்தினால்
அங்கபீடையுடையவன், குரூரமுடையவன், கொலை செய்பவன் மூர்க்கன்,
பந்துஜன துவேஷி ஆவான்.
2. ஜென்ம லக்கினத்திற்கிரண்டாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் அதிக
பித்தமுடையவன், போகி, வீண் விசாரமுடையவன்,
ஆராய்ச்சியுடையவன், பிரசங்கியாவன்.
3. ஜென்ம லக்கினத்திற்கு மூனறாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன்
தயையில்லாதவன், செய்நன்றியுடையவன், துஷ்டாத்துமா, பாபச்செய்கையுடையவன்,
ஸ்திரமான ( நிலையான ) அறிவுடையவன், சந்தோஷி, தாதா ( அதாவது கொடையாளி )
தனசம்பாதனையுடையவன், ராஜ வல்லவனாவன், சேனாநாயகனாவன்.
4. ஜென்ம லக்கினத்திற்கு நான்காமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் பந்தனம், வியாதி
முதலியன உடையவன், புத்திரன் பாக்கியம் முதலியன இல்லாதவன்.
5. ஜென்ம லக்கினத்திற்கு ஐந்தாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன்
தரித்திரமுடையவன், ரூபமுடையவன், கபம், பித்தம், சோம்பல், நிஷ்ரூரம்,
தீர்மானமில்லாமை முதலியன உடையவன்.
6. ஜென்ம லக்கினத்திற்கு ஆறாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் சத்துரு
நாசமுடையவன், நல்ல புஷ்டியுடையவன், எல்லோரையும் துரும்பென எண்ணுபவன்,
விஷத்தை முறியச் செய்பவன், கலைகளில் நிபுணன், சாந்தன்.