7. ஏழாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் ( ஜிரன் ஸ்திரீ ) திருடன், ஜாரன், பாபத்தைச் செய்பவன்,
மெல்லிய அங்கங்களுடையவன், சினேகிதத்தையுடையவன். ஸ்திரீயின் திரவியத்திலேயே ஜீவிப்பவன்.
ஏழாமிடத்தில் சனியிருந்தாலும் இப்பலன் பொருந்தும்.
8. எட்டாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் பசியுள்ளவன், துக்கமுடையவன். குருரன், தீக்ஷண்ணிய
ரோஷமுடையவன், கொஞ்சமும் தயையில்லாதவன், தனமின்றியிருப்பவன்
பிராணனை அழிப்பவன், குணமும் இல்லாதவன்.
9. ஒன்பதாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் வெகு கிலேசமுடையவன், மெல்லிய சரீரமுடையவன்,
துஷ்டச் செய்கையும் தயவேயில்லாதவனுமாவான். ஒன்பதாமிடத்தில் சனியிருந்தாலும் இதே பலன்தான்.
மந்தமதியுடையவன். பிசினி அதாவது உலோபி, கோள் சொல்பவன், டாம்பீகமுடையவன்.
10. பத்தாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் புத்திரருடன் கூடியவன், சுகி, போக்தா,
தெய்வார்ச்சனை முதலியன பிரியமுடன் செய்பவன், யோகதர்மமுடையவன்.
11. பதினொராமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் நல்ல ஸ்திரீகளைப் போகிப்பவன்,
போகி பிரஜா உற்பத்தி செய்பவன், பந்துகளுக்கு இஷ்டமானதை செய்பவன்.
சார்வபெளமன் என்கிற யோகமடைந்து இஷ்டமானதைச் செய்பவன்.
12. பன்னிரண்டாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் நீச்ச செய்கையுடையவன், பாபி, அங்கவீனமடையவன்,
கெட்ட பெயருடையவன், சோம்பலுடையவன், நீச்சர்களிடம் விளையாடுபவன்,
நீச்ச ஸ்திரீ சேர்க்கையுடையவன்.