நாம் வளர்ச்சி பாதையில் செல்ல
திறமையாக திட்டமிடவும், செயல்படவும் வேண்டியுள்ளது.
இதை எண்ணமற்ற நிலையில் செய்யமுடியாது.
இப்போது நாம் எந்த முடிவுக்கு வருவது
என்பது குழப்பமாகத்தான் இருக்கும்.
ஆனாலும், குழப்பம் தெளியவேண்டும்
அதற்கு ஒரே வழி
வினாவும், விசாரித்தலும்தான்.
நம் வாழ்க்கையில் எண்ணத்தின் இடம் என்ன
என்ற விசாரிக்க ஆரம்பிக்க வேண்டும்
அதில் நாம் எண்ணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்வதற்கும்
எண்ணம் நமது இயல்பான வாழ்க்கையில் குறிக்கிடாமல் இருப்பதற்கும்
உள்ள எல்லைக்கோடு எது என்பதை
கவனமாக உற்றுப் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்.