ஒருவாறு சிந்தித்து பார்த்தால்
மனிதனுக்கு மரணமே மிக பெரிய பயமாய் இருந்திருக்கிறது
இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.
உண்மையில் சொல்லப்போனால்
மரணம் வரும் வினாடி வரை
நீங்கள் வாழ்க்கையில் மரணத்தின் பயத்தை ஒத்தி வைத்திருக்கிறீர்கள்
அதாவது மரண பயத்திலிருந்து தப்பித்து வந்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம்
நாம் நம்மிடம் உள்ள பல பயங்களில் இருந்து விடுபட
அல்லது தற்காலிமாக வேணும் தப்பிக்க
கோயில், மதம், கடவுள் போன்றவற்றின் துணையை கைக்கொண்டு வந்துள்ளோம்
ஆனாலும்
எத்தனையோ மதங்கள், கோயில்கள், கடவுள்கள்,
தத்துவங்களாலும் மனிதனின் பயத்தை
இன்று வரை போக்கவில்லை போக்கமுடியவில்லை.