எதை பற்றி அறிய வேண்டுமென்றாலும் அதை பற்றி அறிய தடை செய்யும்
கணிப்புகள் எதுவும் நம்மிடம் இருக்க கூடாது
முடிவை முடிவு செய்து ஆராய்கிறேன் என்று சொன்னால்
உள்ளது உள்ளபடி அறிய முடியாமல் போய்விடும்
ஆராய்வதில் மட்டுமே நின்றால் சரியான முடிவு தானே வந்துவிடும்
இந்த சூத்திரத்தை கை கொண்டு பயம் என்றால் என்ன என்பதை அறிய முற்படுவோம்
பொதுவாக பயத்தின் கூறுகள்
கடந்த கால நிலைகள், நிகழ் கால நிலைகள், எதிர்கால நிலைகள்,
உடல் மனம் போன்றவை சம்பத்தப்பட்ட விஷயம் இதை புரிந்து கொண்டு
பயம் உருவாகும் போது மேற்சொன்ன எது சம்பந்தப்பட்ட பாதையில்
பயமாக வருகிறது என்பதை புரிந்து கொண்டால் நாம் அதில் இருந்து
வெளியேர வசதியாய் இருக்கும்
பயங்களின் ரூபங்கள் எவை என்று யோசித்தால்
இருட்டு பயம் பிறர் என்ன சொல்வார்களோ என்ற பயம்
நிலையற்ற நிகழ்கால, எதிர்கால பயம் இறப்பின் பயம்
அணுகுண்டு பயம் இப்படி இன்னும் பல பல
இதில்
அர்த்தமுள்ள பயங்களும் உண்டு
அர்த்தமற்ற பயங்களும் உண்டு
காலமும் நேரமும் மனதின் பலவீன சந்தர்ப்பமும் பயத்தின் வித்து
இப்போது வித்து எது என்று தெரிந்து கொண்டாயிற்று
அடுத்து அதை புரிந்து கொள்வது சுலபம்
புரிந்து கொண்டால் அதிலிருந்து வெளி வருவது மிக சுலபம்