Skip to content
பத்மாசனம் — PADMASANAM
You are here:
- Home
- யோகா
- பத்மாசனம் — PADMASANAM
விரிப்பின் மேல் அமர்ந்து இருகால்களையும் நேராக நீட்டி
சுவாசத்தை வெளிவிட்டு வலது முழங்காலை மடித்து மடிக்கப்பட்ட
வலது காலின் குதிக்கால் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்கவும்.
பின்னர் இடதுகாலை மடக்கி மடித்து வலது காலின் தொடையின் அருகில்
அடிவயிற்றை தொட்டுக் கொண்டிருக்கும் படி வைக்கவும். இவ்வாறு மாற்றி வைக்கப்பட்ட
இரண்டு குதிகால்களும் மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதவாது, மார்பு, முகம் ஆகியவற்றை நேராக நிமிர்த்தி முதுகை
வளைக்காமல் சுவாசத்தை வெளியிட்டுக் கொண்டு நிமிர்ந்து
இருந்து இரண்டு கைகளையும் படத்தில் உள்ளபடி சின் முத்திரையுடன்
வைத்து இருக்கவும். மனதை ஒரு நிலைப்படுத்த பார்வையை மூக்கின்
நுனியில் செலுத்தவும். இரு முழங்கால்களும் தரையினைத் தொட்டுக்
கொண்டு இருக்க வேண்டியது அவசியம். சுவாசம் மெதுவாக
ஒரே நிலையில் இருக்கவேண்டும். கண்களை திறந்தே இருத்தல் அவசியம்.
இதுவே பத்மாசனமாகும்.
பலன்கள் – அடிவயிற்றுப் பகுதிக்கு இரத்த ஒட்டம் அதிகமாகும்.
நன்றாகப் பசி ஏற்படும். வாதநோய் நீங்கும். பாதங்களை அழுத்துவதன்
மூலம் பெண் உறுப்புகளுக்கு நன்கு இரத்த ஒட்டம் சீராகச் செல்கிறது.
கர்ப்பாசயத்திற்குரிய நரம்பு மண்டங்களைப் பலப்டுத்துகிறது.
சுவாச உறுப்புகள் நன்கு இயங்கப் பயன்படுகிறது.
Go to Top