பத்மாசனம்.
பத்மாசனம் செய்யும் முறை — முதலில் காற்றோட்டமான நல்ல ஒரு இடத்தைத் தேர்ந்தெடுங்கள். தூய ஒரு வெண்ணிற ஆடையை விரியுங்கள், உடலுக்கு இறுக்கமில்லாத ஆடையை அணியுங்கள், அப்படி அணியக்கூடிய ஆடை பருத்தி ஆடையாக இருப்பது நல்லது.
இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடைமீதும் மாற்றிப் போடவும், கால் மூட்டுகள் இரண்டும் தரையைத் தொட வேண்டும். குதிகால்கள் இரண்டும், வயிற்றின் அடிபாகத்தை தொடும்படியாக அமைக்கவும். முதுகெலும்பை நேராக நிமிர்த்தி, கம்பீரமாக உட்கார வேண்டும். இரண்டு கைகளையும், சின் முத்திரையுடன் அமரவும்,
சின் முத்திரை என்பது, ஆள்காட்டி விரலை மடித்து அதன் நுனியை பெருவிரல் நுனியுடன் இணைத்து மற்ற மூன்று விரல்களை நேராக நீட்டி புறங்கையை இரு முட்டிகளின் மேல் வைத்துக் கொள்வது சின் முத்திரை.
கண் பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும்.
சிலருக்கு இந்த ஆசனம் எளிதில் வராது, ஒவ்வொரு காலாக தொடைமீது போட்டுப் பழகவும், தொடர்ந்து முயற்சித்தால் எளிதில் வந்து விடும்.
ஆரம்ப கட்டத்தில் சில வினாடிகள் இருந்தால் போதுமானது. வலி இருந்தால் உடனே ஆசனத்தை கலைத்துவிடவும். பழக பழக வலி இருக்காது. ஒன்று முதல் மூன்று நிமிடம் அமரலாம்.
பலன்கள்
அடிவயிற்றுப் பகுதிக்கு இரத்த ஒட்டம் அதிகமாகும். நன்றாக பசி எடுக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். வாத நோய் தீரும், வழி பாடு, ஜெபம், தவம், மன ஒருமைப்பாடு இவற்றிற்க்கு சிறந்தது. நாடி சுத்தி, பிராணயாமம் இந்நிலையில் இருந்து கொண்டு செய்தல் நலம்.
After reading this post i got an idea on how to sit in padhmasana and rules to be followed while sitting in padhmasana .
THANK YOU AYYA