போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே
பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும்
கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும்
மனிதனாகி விடாது. எனவே இந்தத் தோல்விகளையும்
இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதே.
ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள்.
ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும்
ஒருமுறை கைக்கொள்ள முயற்சி செய்.