பங்கஜம் என்றால் தாமரை என்று பொருள்
இம்முத்திரை தாமரை போல் காட்சியளிப்பதால்
பங்கஜ முத்திரை என்று அழைக்கிறோம்.
இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று குவித்து
இரண்டு கை பெருவிரல்கள் மற்றும் சுண்டு விரல்கள் மட்டுமே
ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.
மற்ற விரல்கள் ஒன்றையொன்று தொடாமல்
விரிந்து சற்று வளைந்து இருக்க வேண்டும்.
பலன்கள் :-
மனதில் தோன்றும் கோபம், பொறாமை, வெறுப்பு, ஆணவம் போன்ற
தீய எண்ணங்களை போக்கி மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றச் செய்கின்றது.
மனதில் மென்மையும் அமைதியும் நிம்மதியும் உண்டாகும்.
உடலில் அழகும் பளபளப்பும் உண்டாகும்.
நரம்பு மண்டலம் ஜீரண மண்டலம் வலுப்பெறும்.
உடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறும்.
கழுத்து வலி முதுகு வலி காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
இம்முத்திரை செய்யும்போது சிலருக்கு சளி அல்லது லேசான வயிற்றுப் போக்கு உண்டாகும்
அதனால் ஒரு ஆபத்தும் இல்லை.
அதிகமாக தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறுவதற்கான அறிகுறியே.
இந்த ஆசனத்தை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்
அதற்குமேல் செய்யக்கூடாது.
இந்த ஆசனத்தை பத்மாசனம், சுகாசன நிலையில் செய்யலாம்.
முடியாத வயதானவர்கள் படுத்துக்கொண்டும் செய்யலாம்.