ஐயோ ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே !
ஆனால், இந்த விஷயம் கண்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே !
அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’
என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான்.
நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.
யாராவது தனதுபிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது,
அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து
கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே !
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா ? இல்லை. அவளும்
தனது பலத்தையேநம்பி, சபையில் வந்து வீண் வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே
ஒழிய, என்னைக் கடைசி வரை கூப்பிடவேயில்லை ! நல்லவேளை.. துச்சாதனன்
துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி… ஹரி… அபயம் கிருஷ்ணா!
அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி.அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்.
இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.
“அப்படியானால், கூப்பிட்டால் தான் நீ வருவாயா ?
நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில், கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு
வரமாட்டாயா ?” புன்னகைத்தான், கண்ணன். “உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும்
இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம் மட்டுமே,
நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே !
எத்தனை உள்ளர்த்தம் வாய்ந்த அருமையான ஆழமான தத்துவம்!
பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும்,
அவனை உதவிக்கு அழைப்பதும், ஓர் உணர்வுதானே !”அவனின்றி ஓர்
அணுவும் அசையாது” என்ற நம்பிக்கை நமக்கு வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?
அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும் ?