Skip to content
ஆட்டுப்புழுக்கை, மாட்டு சாணிய மண்ணில் போடுகிறோமே, அதுவும் மண்ணில் இருக்கும்
நுண்ணுயிரிகள்தான். இன்றைக்கு, அதனை பாக்கெட்டுகளில் எல்லாம் போட்டு
விவசாயிகளுக்கு கொடுக்கிறோம். அசோஸ்பைரில்லம், ரைசோபியோம், பாஸ்போ
பாக்டீரியம், சூடோமோனாஸ் எல்லாம் கண்ணுக்கு தெரியாத உயிரிகள். கண்ணுக்கு
தெரியாத இந்த உயிரிகள் காற்றில் இருக்கும் நைட்ரஜனை எடுத்து செடிக்கு வினியோகம்
செய்கிறது. பூமியில் உறைஞ்சு கிடைக்கிற பாஸ்பரசை இளக்கி வினியோகம் செய்கிறது.
பூமியில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் பொட்டாசியமாக மாற்றி வினியோகம்
செய்கிறது. நீங்கள் எதை, எதையெல்லாம் கடையில் இருந்து வாங்கி வந்து போட
வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவை எதையும் வாங்கி போட வேண்டிய அவசியமே
கிடையாது. அவ்வளைவையும் பூமியில் இருக்கிற நுண்ணுயிரிகள் செய்கிறது. எனவே,
பூமியின் வளத்தை பாதுகாக்க 3 விஷயம் இருக்க வேண்டும். ஒன்று நிலம் பொல
பொலவென்று இருக்க வேண்டும். இரண்டாவது அதில் உயிரினங்கள் இருக்க வேண்டும்.
மண்புழு, பூரான், தவளை, நண்டு இருக்க வேண்டும். 3வது இவைகள் எல்லாம் வேலை
செய்தால் செடிக்கு தேவையான எல்லா ரசாயனமும் மண்ணுக்கு வந்து விடும். இந்த 3ம்
சேர்ந்தால்தான் நில வளம். அந்த நிலம் தான் செடிகளை வளர்த்து நமக்கு தேயைானதை
எல்லாம் வாரி, வாரி கொடுக்கிறது.
Go to Top