Skip to content
இயற்கையில் சில விதிகள் உண்டு. வயலுக்கு என்ன போட வேண்டும் என்று கேட்டால்
40 விழுக்காடு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போட வேண்டும் என்று
சொல்கின்றனர். அந்த ரசாயனத்தை போடப்போட பூமியில் இருக்கும் உயிரெல்லாம்
இறக்கின்றன. இந்த மண்ணில் இருக்கும் உயிர்களுக்கு எல்லாம் ரசாயனத்தை
போடக்கூடாது. விஷத்தை போடக்கூடாது. போட்டால் அது செத்துப்போய்விடும்.
அதுக்கும் பதிலா அது கேட்டபது, கழிவுகளைத்தான். ஆட்டு புழுக்கையை போடும் போதும்,
மாட்டு சாணத்தை போடும்போதும், கோழிக் கழிவை போடும் போதும், இலை தழைகளை
வைத்து சாணி தண்ணீரை தெளித்து கம்போஸ்ட் ஆக்கி மண்ணில் போடும்போதும்
பூமியில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு உணவு கிடைக்கிறது. பூமி கழிவுகளை மட்டும்தான்
கேட்கும். பூமி நமக்கு நல்லபடியா திருப்பி கொடுத்துக் கொண்டே
இருக்கும்.‘போட்டோசிந்தசிஸ் ‘ என்று ஒன்று உண்டு. சூரியனில் இருந்து வரும்
வெளிச்சத்தை பச்சை இலை வாங்கி, அதை சர்க்கரையா மாற்றுகிறது. அந்த சர்க்கரையை
தின்றுவிட்டு மிச்சத்தை வேருக்கு அனுப்புகிறது. அந்த வேர் எல்ல இடத்திலும் பரவலா ஓடி
பூமியில் இரக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் பச்சை இலைக்கு அனுப்புகிறது. இலை,
வேருக்கு சாப்பாடு போடுகிறதே ஒழிய, வேர் சாப்பாடு கொடுக்கிறேன்னு சொன்னால் அது
சயின்ஸ் இல்லை.
Go to Top