Skip to content
காமத்தை விட கொடிய நோய் இல்லை.
அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.
கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ,
அவனுக்கு உறவினர்கள் உண்டு,
நண்பர்கள் உண்டு.
பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை,
அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது,
பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது,
பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும்,
பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும்,
முட்டாளை நகைச்சுவை மூலமும்,
அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி,
உணவு
நியாயமான முறையில் வரும் வருமானம்
ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும்.
ஆனால் கற்கும் கல்வி, ,
தர்ம காரியங்கள்
ஆகியவற்றில் திருப்தி அடையாமல்
தொடர்ந்து செய்ய வேண்டும்
Go to Top
Useful information ayya