நமது வாழ்க்கை கடினமாயும், குழப்பங்களும் ,
எதிர்மறை நிறைந்ததாயும் இருக்கிறது.
தனி மனித வாழ்க்கை மட்டுமல்லாது
பொது வாழ்க்கையும் கூட அப்படி தான் இருக்கிறது
எங்கு நோக்கினும் அழிவு
கோட்பாடுகள்
நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றது
எதற்கும் எதிலும் மதிப்போ
ஆதாரமோ நம்பிக்கையோ இல்லை
அது
மதமாகட்டும்
நிறுவனமாகட்டும்
தத்துவமாகட்டும்
அரசியல் ஆகட்டும்
இப்படிபட்டக் குழப்பம் நிறைந்த உலகில்
நாம் எப்படி வாழ்வது என்று
நாம் சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்
இத்தனைக்கும் காரணம்
சரியான நடத்தை இல்லாமை என்ற முடிவுக்கு வந்தால்
சரியான நடத்தை எது என்ற வினாவும்
அப்படி சரியான நடத்தை என்ற ஓன்று உண்டா
என்ற சிந்தனையும் வருகிறது.
அதனால்
நாம் இப்போது சரியான நடத்தை எது
என்பதை அறிய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.
இப்படி ஒரு நிர்பந்தத்தில் நாம் இருப்பதை முதலில் புரிந்து கொள்வோம்