அன்பானவர்களுக்கு
நான் படித்த சிந்தித்த விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன்
மனித பிறவிகளாகிய நாம் ஒரு வன்முறை சமுதாயத்தை உருவாக்கியுள்ளோம்
இதை தான் இத்தனை ஆண்டுகளாக உருவாக்கியுள்ளோம்
என்பதை கூட நாம் இன்னும் உணரவில்லை
இந்த நிலைக்கு வளர்ச்சி என்று பெயரிட்டு அழைக்கிறம்
நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் எல்லாம்
நமது முயற்சியின் பலனாகும்
இதற்க்கு பின்புலமாக இருப்பது
கடின பிரயத்தனங்கள் நமது வேதனைகள்
திகைப்பூட்டும் கொடுமைகள் தான் அமைத்துள்ளன.
இந்த உலகத்தில் இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது
இப்படி ஒரு வினா எழும் போது
குழப்பம், முறைகேடு, வன்முறை, கொடூர தன்மை,
போரில் சென்று முடியும் கிளர்ச்சிகள் என்ற பதில் தான் வருகிறது.