ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார்.
அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.
அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.
அது கிடக்கட்டும்” என்ற ஞானி “நீ இப்போது எப்படி இருக்கிறாய்” என்று கேட்டார்.
நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்”
முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா???”
இல்லை
அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்??
இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்???””
விழித்தான் அரசன்.
ஞானி சொன்னார்.
அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை.
நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய்.
அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே.
நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும்.
இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல.
எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல
எனக்கு கொடுக்கப்பட்டது. என்று உணர்ந்தால்
துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.”
