ஒருவரின் மாத சம்பளம் 10,000 ரூபாயை.. அவர் பணமாக செலவழிச்சா, 10,000 ரூபாயும் செலவு செய்யலாம். ஆனால்!!! அதையே அவர் வங்கி மூலமா DIGITAL money யா செலவழிச்சா, சேவை கட்டணம் 15% – 1,500 ரூபாய் போக, அவரால் 8,500 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும். யோசிங்க இதோ 130 கோடி பேருக்கு 1500 × 130கோடி = 1,95,000,கோடி ரூபாய் சேவைக் கட்டணமாக மாதம், மாதம் வங்கிகளுக்கோ அல்லது கும்பானிகளுக்கோ போய் சேரும். ஒரு வருடத்துக்கு 24 லட்சம் கோடி ரூபாய் சேவை கட்டணம் மட்டும். இதுதான் உலக மகா ஊழல். இதுக்கு பேர்தான் சர்வாதிகாரம். இதப்பத்தி, கொஞ்சம் யோசிங்க… அட! கோமாளிகளுக்கு புரியாதது படிக்க வேண்டாம்! ஏன் இந்தியா மற்ற நாடுகளைப் போல முன்னேறக்கூடாதா?… மக்கள் டெபிட் கார்டு, நெட்பேங்கிங்லாம் பயன்படுத்தக்கூடாதா?… ஆன்லைன் பரிவர்த்தனைகள் வரக்கூடாதா?… ஏன் டீக்கடைல PAYTYM மெசின் யூஸ் பண்ணகூடாதா? தாராளமா பண்ணலாம் பிடிச்சவங்க பண்ணிக்கட்டும் எல்லாரும் அதை பண்ணனும் அப்படிங்கறது தான் சர்வாதிகாரம் கேட்டா வளர்ச்சி, முன்னேற்றம், அப்படின்னு கதை சொல்லுவாங்க யாருக்கு வளர்ச்சி, யாருக்கு முன்னேற்றம் அப்படிங்கறது தானே இங்க விஷயமே அட! அப்பாவிகளா டெபிட்கார்டு பயன்படுத்துவதையும்,ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்வதையும், ஒரு நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக, உங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தது எந்த அறிவு ஜீவிக நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம் என்றால், அரபுநாடுகள் குருடாயிலை அவர்களின் மூலதனமாக ஆக்கியது போல, இந்தியாவின் அடையாள சின்னமாகிய விவசாயத்தை மூலதனமாக்க வேண்டும் விவசாய அழிவை தடுக்க சட்டம் இயற்றவேண்டும் அது நாட்டை முன்னேற்றும். பொது துறைகளில் தனியார் முதலீட்டை 100% தடை செய்து “அரசின் வருமானம் முழுவதும் நாட்டிற்கே” என்று சட்டம் இயற்று. அரசாங்க பணிகளில் தவறு செய்யும் பணியாளர்களை உடனே வெளியே அனுப்பு தனியாரால் நடத்தப்படும் பணிகள் சரியாய் நடக்கும் போது அரசாங்க பணிகள் ஏன் சரியாய் நடக்காது வளங்களை சுரண்டும் கோலா, கார் கம்பெனிகள் போன்ற அந்நிய முதலீடுகளை தடுத்து அதிகபட்ச FDI அளவை 10% கீழே கொண்டு வரவேண்டும். அதுவும் அத்தியாவசிய பொருள்களுக்கான முதலீடாக இருக்குமாறு விதிமுறைகளை உண்டாக்கவேண்டும். உற்பத்தி வரி, சேவை வரியை குறைத்து, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தவேண்டும். நாட்டின் ஏற்றுமதியை உயர்த்தி அந்நிய செலாவணியை அதிகரிக்க சட்டம் இயற்றவேண்டும். சாதி, மத அரசியல்களுக்கு முற்றிலும் தடைவிதித்து சட்டம் இயற்ற வேண்டும். ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை சட்டமாக்கவேண்டும். மருத்துவத்தை பொதுத்துறையாக மாற்றி சட்டம் இயற்றவேண்டும். இன்னும் எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள் இருக்க… 2000 ரூவாவை கொண்டுவந்தா, டெபிட் கார்டு வந்துட்டா – நாடு வளர்ச்சி அடைஞ்சுரும்னு கூவுறீங்களே, நீங்கள் எல்லாம் உண்மையிலேயே கோமாளிகளா …? இல்ல, கோமாளிக மாதிரி நடிக்கிறீங்களா…? Category: பல்சுவை கதம்பம்By admin@powerathmaFebruary 12, 2021Leave a commentTags: DIGITAL moneyDIVINEPOWER AATHMAA .COMPAYTYMஇந்தியாஊழல்கோமாளிசர்வாதிகாரம்டெபிட் கார்டுமுன்னேற்றம்வளர்ச்சி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்3NextNext post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்4Related Postsவாழ்க்கை சுவையானது.November 30, 2024அதிசய காந்த கண்ணாடிAugust 10, 2024இரும்புக் குதிரைகள்August 9, 2024காந்தளூர் சாலை போர் 4August 8, 2024காந்தளூர் சாலை போர் 3August 7, 2024காந்தளூர் சாலை போர் 2August 6, 2024