ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கில் உள்ளது, போட்ஸ்வானா, இந்த நாட்டின் வடபகுதி,
இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏரியாக இருந்து, இன்றைக்கு பாலைவனமாக மாறிவிட்ட
மக்கடிக்கடி-ஒகவாங்கோ என்ற பகுதிதான் நவீன மனிதர்களின் தாய்மடி,
கோய்சான் பழங்குடிகளிடம் நடத்தப்பட்ட மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ ஆய்வுவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.
இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவம் ஒன்று எத்தியோப்பியாவின்
ஒமோ கிபிஷ் என்ற இடத்தில் கிடைத்துள்ளது.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது குரங்கிலிருந்து மனித இனம் தோன்றவில்லை,
வாலில்லா குரங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பொதுமூதாதை இருந்து.
அதிலிருந்தே மனித இனம் தோன்றியது.