எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ,
மன வலிமையை வளர்க்கச்செய்யுமோ,
விரிந்த அறிவைத் தருமோ,
ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக்கொண்டு நிற்கச் செய்யுமோ
அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.
மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும்,
பிரம்மசரியமும்,வாழ்க்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன.
எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம்சொல்கிறது.
இந்த அறிவுஒரு சிறுவனிடம் கூட இருக்கிறது.
இந்த அறிவை விழித்துஎழும்படி செய்வதுதான்
ஆசிரியனுடைய வேலையாகும்.