சற்று வித்தியாசமான கோலத்தில் புறமுதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் நந்தியையும் சில தலங்களில் தரிசிக்கலாம்.
திருவல்லம்
வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருவல்லம்
ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது
கஞ்சன் என்ற அரக்கன் இடையூறு செய்தான்.
குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப் பார்த்து
கஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார்.
நந்தியிடம் அடிபட்ட கஞ்சன்,
“இனிமேல் குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உயிர் தப்பினான்.
இருந்தாலும் அவன் மீண்டும் தொந்தரவு கொடுக்காமலிருக்க
கோவிலின் வாயிலை நோக்கிய வண்ணம் இறைவனுக்கு புறமுதுகுகாட்டிய நிலையில் உள்ளார்.
