சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு,
நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின்
சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும்.
கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும்.
இந்த நந்தியை அதிகார நந்தி என்பர்.
இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து
பதினாறு வரங்களைப் பெற்றவர்;
சிவகணங்களின் தலைவர்.
