லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடைய நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களில்
11 – ஆம் பாவாதிபதி இருந்தால்
இன பந்துக்களால் தொல்லை எடுத்த காரியத் தோல்வி, உடல் பாதிப்பு, தாயின் நீண்ட ஆயுள் கெடுதல், மருமகன்,
மருமகளால் தொல்லை, கடிதங்கள் மூலம் வருத்தம், எதிரியால் தோல்வி, மூத்த சகோதர வகையில்திருப்தியற்ற
நிலை அல்லது இல்லாமை 2 – ஆம் தாரத்தினால் விவகாரம்,பாட்டன், பாட்டிமார்களால் தொல்லை
பாதிப்பு போன்றவை உண்டாகும்..
லக்னாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களில் 12 – ஆம் பாவாதிபதி இருந்தால்
தூக்கம் இன்மை,படுக்கை சுகம் கெடுதல், தொலை தூர பயணத்தால் பாதிப்பு, பரதேச வாசம், மோசடி, பிரிவினை,
ராஜ துரோக செயல்கள் சிறை பயம்,கீழ்தரப்பட்ட ஆட்களால் ஆபத்து, மிருக பயம், உடல் பங்கம், சூறையாடுதல்,
கொள்ளை அடித்தல் அரசாங்க விரோத காரியத்தால் பயம், இடக்கண் கோளாறு, தேகத்தில் இடது பாகம் கோளாறு,
கால்பாதம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் போன்றவை ஏற்படும்..
தனகாரகன் அல்லது தனாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் ராசியாதிபதி செல்லும் போது
தன நஷ்டம் திருட்டு பயம், சோரபயம் போன்றவை ஏற்படும்..
திசா நாதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்களில் கோச்சாரத்தில் எந்த பாவாதிபதி சஞ்சாரம்
செய்கிறாரோ அக்காலத்தில் அப்பாவ சம்பந்தப்பட்ட விஷயங்கள் மூலம் பாதிப்பு ஏற்படும்.
இப்பாதிப்பு திசா நாதன் நட்சத்திரத்திலோ அப்பாவதிபதிகளின் நட்சத்திரங்களிலோ
அதன் திரிகோண நட்சத்திரங்கள் வரும் நாளில் ஏற்படும்
இதன்படி புத்தி நாதனுக்கும் அந்திர நாதனுக்கும் பார்த்துக் கொள்ளலாம்..